Dec 6, 2011

கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல்




முல்லை பெரியார் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் கேரளா அரசு செயல்படும் இந்நிலையில் கேரளா சென்ற அப்பாவி தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல் காரணமாக கம்பம் ,குமுளி ஆகிய இடங்களில் தமிழக போலீசார் கேரளா செல்லும் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர் .

சிலர் குமுளி காவல் நிலையம் அருகிலேயே கேரளாவில் இருந்து வரும் தமிழத்தை சேர்ந்த லாரியை தடுத்து நிறுத்தி வாகனத்தை சேதபடுத்தி உள்ளனர். மேலும் கேரளத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அணையை உடைக்கும் எண்ணத்துடன் கடப்பாரை ,மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் .இந்த செயல் மிகவும் கண்டிக்க தக்கதாகும் .

இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் உண்டாக்கி உள்ளது .தமிழகத்தில் சில இடங்களில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது .இந்நிலை நீடிக்குமானால் இரு மாநில உறவுகள் பாதிக்கபடுவதுடன், இரு மாநில மக்களின் ஒற்றுமையும் ,அமைதியான வாழ்வு உரிமையும் சீர்குலையபடும்.

முல்லை பெரியாறு தொடர் கதையை முற்று புள்ளி வைக்க உச்ச நீதிமன்றமும் ,மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் இந்தியாவின் மாநில அரசுகளின் நல்லுறவு ,ஒற்றுமை,கேள்விகுறியாகிவிடும் என்பது நிச்சயம்.அதுமட்டும் அல்லாமல் இரு மாநிலங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பும் மத்திய அரசு கைகளில் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும் .

முல்லை பெரியார் அணையின் முழு பிரச்சினை விவரமும் , தீர்வும் அடங்கிய ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது இதை அவசியம் பாருங்கள் புரியும் .

முல்லை பெரியார் அணை-பகுதி -1

http://www.youtube.com/watch?v=eXti8xblCLM

முல்லை பெரியார் அணை-பகுதி -2

http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE

எச்சரிக்கை !!
வன்முறையாளர்களே வன்முறை நிரந்தர தீர்வல்ல .
பாதிக்க படபோவது இரு மாநில அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல .சிந்திப்பீர்
!!!!!!!!






Oct 31, 2011

சமையல் எரிவாயு உபயோகிப்போருக்கு நற்செய்தி






சமையல் எரிவாயு உபயோகிப்போர் மறு சிலிண்டர் பதிவு செய்ய பல மணி நேரம் போராட வேண்டிவருகிறது தொலைபேசியில் அழைத்தால் எப்போதும் என்கேஜ் டோன் வரும் .நேரில் சென்றால் கால் கடுக்க காத்திருந்து பதிவு செய்யவேண்டும் . இப்போது அந்த தொல்லைகளில் இருந்து விடுதலை விடுதலை.

அரசு புதிய முறையாக தொலைபேசியில் பதிவு செய்யும் முறை அறிமுகபடுத்தி உள்ளது .IVRS (INTERACTIVE VOICE RESPONSE SYSTEM )என்ற முறை அறிமுகபடுத்தி உள்ளது.

முதல் முறையாக சென்னையில் மார்ச் மாதமும்,இன்று முதல் கோவையிலும் அமுலுக்கு வருகிறது .கோவையில் உள்ள 4 லட்சம் பயனாளிகள் பயன்பெறலாம் .கோவையில் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் இந்த சேவையை துவக்கி வைத்தார் .


81240-24365 என்ற எண்ணுக்கு எந்த தொலை பேசியிலிருந்தும் எந்த நேரமும் ,விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம் .முதல் முறை நமது எரிவாயு எண் மற்றும் நமது தொலை பேசி எண் பதிவு செய்துவிட்டால் .அடுத்த முறை ""REFILL "" என்று டைப் செய்து மேற்கண்ட எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் பதில் SMS -ல் நமது வரிசை பதிவு எண வரும் .

மேலும் விவரங்கள் அறிய 2247396 ,2242696 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் . எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்திகொள்ளவும் .

Oct 6, 2011

பதிவுலக நண்பர்களின் ஆசி, வாழ்த்து வேண்டி



நண்பர்களே ,
என் புதல்வன் 5 வயதான சர்வேஷ்வர் ஒரு வருடமாக டிரம்ஸ் பயின்று வருகிறார் .அவர் தற்சமயம் u.k.g படித்து வருகிறார் .அவர் டிரம்சில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார் .கோவையில் சலிவன் வீதியில் மல்லிசேரி ஸ்கூல் ஆப் மியுசிக் -ல் டிரம்ஸ் பயின்று வருகிறார் .இங்கு எல்லா வகையான இசை கருவிகளும் பயிற்றுவிக்கிறார்கள் .இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசை பயில்கிறார்கள் .


சர்வேஷ்வர் ஒரு இசை நிகழ்ச்சியில் ( drums solo performance ) தனி திறமை நிகழ்ச்சி டிரம்ஸ் இசை வாசித்தார் .அவர் வாசித்த இசை நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு எல்லா நண்பர்களின் பார்வைக்காக பதிவிட்டுள்ளேன் .எல்லோரும் இந்த இசை நிகழ்ச்சி தொகுப்பை கண்டு என் புதல்வன் மேலும் மேலும் இசையில் பல சாகசங்கள் புரியவும் ,இசையில் வல்லவனாகவும் வாழ்த்துமாறு வேண்டிக்கிறேன் .



you tube ல் youngest indian drummer 5 year old -DRUMS SARVESH என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன் .அதன் லிங்க் http://www.youtube.com/watch?v=h-ARboMTVMI

பெற்றோர்களுக்கு வேண்டுகோள் :குழந்தைகளிடம் எந்த துறையில் ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்குவிக்கலாம்.










Sep 13, 2011

சிறை பிடிக்கப்பட்ட 110 இந்தியர்களை மீட்டார் -உயர்திரு .Dr .சைலேந்திர பாபு


பெங்களுரை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் செயல்படுகிறது, இந்நிறுவனம் தாய்லாந்து சென்று வர நபர் ஒருவருக்கு ரூபாய் 10000 ,தங்கும் இடம் ,உணவு ,சுற்றிபார்க்க எல்லாம் இலவசம் என்று அறிவித்தது .


இந்த விளம்பரத்தை பார்த்து கோவையை சேர்ந்த தம்பதியினர் இருவரும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 110 பேரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு கடந்த 8 ம் தேதியன்று புறப்பட்டு சென்றனர் .


அங்கு இவர்களை வரவேற்ற ஏஜென்ட் ஒரு ஹோட்டலில் எல்லோரையும் தங்கவைத்தனர் .மறுபடியும் ஏஜென்ட் வரவில்லை.தங்கி இருந்தவர்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டபோது இந்தியாவில் இருந்து எங்களுக்கு பணம் வரவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் தலா ரூ .30000 / = தரவேண்டும் இல்லாவிட்டால் உங்களை விடமாட்டோம் என்று எல்லோரின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டு 110 பேரையும் சிறை பிடித்தனர் .


இந்த தகவலை கோவையை சேர்ந்த நபர் தனது மகளான கல்லூரி பெண்ணிடம் நடந்தவற்றை போனில் தெரிவித்து காப்பாற்றும்படி கூறிவுள்ளார் .

உடனடியாக அப்பெண் தனது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பட்ட அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார் .கனிவுடன் விசாரித்த தற்போதைய வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு.Dr.சைலேந்திர பாபு உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.


ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் தொடர்பு கொண்டபோது அவர்கள் சுமார் பத்து லட்ச ருபாய் பெற்று கொண்டு தலை மறைவானது தெரிய வந்தது .
தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள ஏஜெண்டுகளிடம் தொடர்புகொண்ட திரு .Dr.சைலேந்திர பாபு 110 பேரும் ஏமாற்றப்பட்ட விசயமும் அவர்களை உடனடியாக இந்தியா அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுத்து "உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை அனுப்பிவைக்கிறோம் "என்று உறுதியளித்தார் .


.ஜி.திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உறுதியளிப்பை ஏற்றுகொண்ட ஏஜெண்டுகள் அனைவரையும் ஹோட்டல் அறையில் இருந்து விடுவித்தனர் .அவர்களின் பாஸ்போர்ட்டும் திருப்பி வழங்கப்பட்டு 110 பேரும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட்டும் வழங்கப்பட்டது .இன்று அவர்கள் சென்னை அடைவார்கள் . அனைத்து பயணிகளும் தாங்கள் காப்பற்றபட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சியும் நிம்மதி பெருமூச்சும் அடைந்தனர் .


பொது மக்கள் இனிமேலாவது இலவசங்களை நம்பி
ஏமாறாமல் தீர விசாரித்து பயணங்கள் தொடரவும்



வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உடனடியான அதிரடி நடவடிக்கையால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் . 110 இந்தியர்களை கடல்கடந்து இருந்தாலும் எல்லைகளை கடந்து மீட்ட உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் பாராட்டுகளும் ,நெஞ்சார்ந்த நன்றிகளும் ,தொடர்ந்து இது போன்ற பல சாதனைகள் தொடரவும் வாழ்த்துக்கள் .

ஜெய் ஹிந்த்

Sep 5, 2011

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்



இன்று ஆசிரியர்கள் தினம் .எல்லா ஆசிரியர்களுக்கும் என் மனமார ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ,உங்கள் சேவை ,தியாகம் ,அர்பணிப்பு எல்லாவற்றிற்கும் தலை வணங்கி நன்றிகள் கூறிக்கொள்கிறேன் . .இவ்வுலகில் ஈடு இணையற்ற செல்வம் கல்வி செல்வம் கோடி கோடியாய் செல்வம் இருந்தும் கல்வியற்ற செல்வம் பயனற்றது .

ஆசிரியர்கள் தமது வாழ்க்கையை ஏணியாகவும்,ஒரு மெழுகுவர்தியாகவும் , ஜோதியாய் இருந்து நம் எல்லோர் வாழ்விலும் ஒளி ஏற்றுகின்றனர் .மாசற்ற ஆசிரியர்கள் தியாகம் வாழ்க !


அய்யன் வள்ளுவர் வாக்கு :

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம் ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

விளக்கம் எண்ணும் எழுத்தும் எனப்படும்

அறிவுக்
கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

விளக்கம் அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

விளக்கம் கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை..
இத்தகைய பெருமை மிக்க ஆசிரியர் தினமானது ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியும் , கல்வியின் தியாக சுடரான மறைந்த உயர்திரு Dr. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான
செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாட படுகிறது.

ஆகவே நம் பதிஉலகம்எல்லோர் சார்பில் ,முன்னால் ஜனாதிபதி உயர்திரு கல்வி செம்மல் Dr. அப்துல் கலாம் அவர்களுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



Sep 1, 2011

தங்கம் ஜாக்கிரதை -அபாயம்





தங்கம் தங்கமாய் விலையிலும் ,மதிப்பிலும் ஜொலிக்கிறது .கூடவே தங்கத்தின் ஆபத்தும் அதிகமாய் வளர்கிறது இதற்கு நாளேடுகளில் பெருகி வரும் கொள்ளை கொலை செய்திகளே சாட்சி . .தங்கம் கைக்கு எட்டா கனியாக விலை உயர்ந்து வருகிறது .விலை உயர உயர நாளுக்கு நாள் கொலைகளும் , கொள்ளைகளும் அடுக்கடுக்காக நடந்தேறி வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சிறிய தங்க சங்கிலிக்காக கழுத்தை அறுத்து உயிரை பலியாக்கவும் கொள்ளைகாரர்கள் தயங்குவதில்லை .காரணம் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் இன்று ரூபாய் 2600 .

பொது நிகழ்ச்சிகள்,கல்யாண வைபவங்கள் செல்லும்போது தமது ஆடம்பரத்தை காட்டும் வகையில் தங்க ஆபத்தை எதிர்கொள்ள வேண்டமே !

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் பெண்கள் அணியும் தங்கத்தின் சராசரியான விலை பட்டியல் இதோ :

செயின் -3 பவுன்
ஆரம்-5 பவுன்
கம்மல் -அரை பவுன்
வளையல் -3 பவுன்
மோதிரம் -அரை பவுன்
ஆக மொத்தம் குறைவாக 12 பவுன் விலை 12 * 21000 =252000 .

ஆபத்து புரிகிறதா .

திருமண நிகழ்ச்சியில் தனியாக விளையாடும் நகை அணிந்துள்ள சிறு குழந்தைகளை கண்காணிக்கும் கும்பல் உண்டு ஆபத்து நகைக்கு என்றால் தாங்கிகொள்ளலாம் குழந்தைக்கென்றால் ?


ஆபத்தை தவிர்க்க சில ஆலோசனைகள் !!!!




காலை வேளைகளில் அதிகாலை எழுந்து தனியாக வாசல் கூட்டுவதை பெண்மணிகள் தவிர்க்கவும் .ஆள் நடமாட்டம் தொடங்கியவுடன் வெளியே வரலாம் .


தமது கை பையில் பெப்பர் ஸ்ப்ரே அவசியம் வைத்து கொள்ளவும்

வாகனத்தில் நம்மை யாராவது பின் தொடர்வது தெரிந்தால் அருகில் உள்ளவர்களுடன் தயங்காமல் உதவி கேட்கவும் .அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் .

வாகனத்தில் வந்து நகை பறிக்க கழுத்தில் கைவைப்பது தெரிந்தால் இரு கைகளால் நகை பிடித்துகொண்டு டக்கென்று கீழே அமர்ந்து விடவும் வாகனத்தில் வருபவர்கள் தடுமாறிவிடுவர்கள்.

இதையும் மீறி தாக்க வரும் கொள்ளைகாரர்களை தைரியமாக தொடர்ந்து தமது கையாலோ ,கை பையாலோ ,குடையாலோ ,கண் பகுதியோ அல்லது கழுத்து உணவு குழாய் பகுதியையோ தாக்கவும் எவ்வளவு பெரிய பலசாலியானாலும் கீழே வீழ்வது நிச்சயம் (மிகுந்த வேகமாக தாக்கிவிட வேண்டாம் ஜாக்கிரதை )

பலமாக அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடவும் .

தனியாக ஆட்டோ அல்லது டாக்சியில் பயணிக்கும் போது நமக்கு வேண்டியவர்களுக்கு பயணிக்கும் வாகன எண் மற்றும் பயணிக்கும்,கடக்கும் பகுதியை sms மூலம் தொடர்ந்து அனுப்பலாம் .

சரி பெண்களுக்கு நகை தான் அழகு .அது இல்லாமல் எப்படி நிகழ்சிக்களுக்கு செல்வது என்று கேட்பது புரிகிறது ?

இன்றைய சந்தைகளில் 1 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் கலை நயம் மிக்க வேலை பாடுகளுடன் கிடைகிறது இந்த நகைகள் அசல் தங்க நகைகளுக்கும் 1 கிராம் தங்க நகைகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை .கவரிங் நகைகளை போல் 1 கிராம் நகைகள் கறுப்பதில்லை .யாராலும் தங்க நகை இல்லை என்ற வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் .ஆபத்தும் இல்லை .

நகைகள் வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கர்களில் வைப்பது சிறந்தது தேவை உள்ளபோது உபயோகித்து கொள்ளலாம் .

முதலீடாக தங்கம் சேமிப்போர் ஆபரணம் வாங்குவதை விட 24 கேரட் காயின் வாங்கலாம் அல்லது தங்கம் எலக்ட்ரானிக் பண்டுகளில் மாதா மாதம் முதலீடு செய்யலாம் .

தங்கத்தால் ஆபத்தில்லாமல் பயனடையுங்கள் வாழ்த்துக்கள்


அளவான ஆடம்பரமா? அல்லது ஆபத்தை காத்திருந்து வரவேற்பதா முடிவு உங்கள் கையில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,





Aug 7, 2011

இன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்




நட்பு கவிதை


தனி மனிதர்களாய் பிறந்தோம் ,,
இணையத்தால் இணைந்தோம் ,
எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !!
பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம் .

Image Upload


எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது ,
ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம்
துறந்தோம், , நட்பால் இணைந்தோம் !!.


Image Hosting Site

எங்களை நட்பு என்ற பாசத்தால்
இணைத்த நட்பே !
நீ வாழ்க !



Image Hosting

பதிவு உலகத்தால் எல்லோரும் ஒன்று பட்டு வாழும் சக இணைய பதிவு நண்பர்கள் மற்றும் இவ்வுலகில்
வாழும் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
! ! !

May 10, 2011

தந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் !--மறு பதிப்பு



இன்று தந்தையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி--அவரின் நினைவும் பிரிவிலும் மீளாமல் கண்ணீர் மலர்களால் சமர்பிக்கும் கவிதாஞ்சலி

அப்பா !

அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .

நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
அனேக விசயங்களை என் தோழனாய்
என் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .

காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
நடை பயில கற்று கொடுத்த கைகளை !
என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !

ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
என் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது என் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .
என்னை மன்னிப்பீர்களா தந்தையே !

வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
என்னை மன்னிக்கவும் ,
என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,


May 8, 2011

இன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்



உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .என் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.எல்லா அன்னையரையும் என் இரு கரம் கூப்பி நிகரில்லாத உங்களை வந்தனம் செய்கிறேன் .உலகத்தில் பெண்ணாய் பிறந்து அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் போது அவள் பெரும் இன்பம் உலகத்தில் எந்த விதத்திலும் ஈடு இணை செய்ய முடியாத பேரின்பத்தை அடைகிறாள் .குழந்தை பெற்றெடுத்த நிமிடம் முதல் அன்னையின் அரவணைப்பு துவங்குகிறது .
(
சொல்லபோனால் கருவிலேயே அவள் அரவணைப்பு துவங்கி விடுகிறது ) .

பால் கொடுக்க துவங்கியது முதல் அன்னை எத்தனை விதமான பங்களிப்பை நமக்கு தருகிறாள் .தனது வாழ்கையின் சுகம், துக்கம் எல்லாமுமாக தன் குழந்தையை தான் பார்க்கிறாள் .அன்னை என்பவள் முதல் ஆசிரியராகவும் ,குருவாகவும் திகழ்கிறாள் .அன்னையை விட உற்ற தோழி இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது .
அநேகம் பேர் தன் காரியம் சாதித்து கொள்ள அன்னையின் முந்தானையை தான் முதலில் பிடித்து கெஞ்சவும், கொஞ்சவும், ஆரம்பிப்போம் சரியா .? எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் .

நம் ஒவ்வொரு அசைவிலும் அன்னையின் பிரதிபலிப்பு இருக்கும் .நம் வாழ்வில் எது சரி? எது தவறு? என்று முடிவு செய்து நமக்கு சரியான பாதையை காட்டுகிறாள் .எதிர்பார்ப்பு இல்லாத ஒரே அன்பு அன்னையிடம் மட்டுமே பெற முடியும் .அன்னையை பாராட்ட
வார்த்தைகள் இல்லை .


தன் இளமை பருவத்தை தன் வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் தாயை வயதானவுடன் தயவு செய்து ராணி போல் பார்த்து கொள்ளாவிட்டாலும் குப்பையாய் நினைத்து அவள் மனம் நோகும்படி அவளை குப்பையில் வீசி விடாதீர்கள்.மூத்த அன்னையரின் முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும் போது தா
ன் அன்னையர் தினம் முழுமையடையும் .

இன்று அன்னைக்கு எல்லோரும் அவருக்கு பிடித்த இனிப்பை வாங்கி கொடுக்கலாம் இல்லாவிட்டால் வாழ்த்தாவது கூறலாம் .அவர் அடையும் மகிழ்ச்சி பாருங்கள் .நான் என் தாயாருக்கு ஐஸ் வாங்கிகொடுத்து ஐஸ் வைத்து விட்டேன் .மகிழ்ச்சி .







Apr 5, 2011

மசினகுடி -திகில் பயணம் தொடர் 2





பலத்த சந்தோசத்துடன் எங்கள் வாகனங்கள் காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது .சற்று தூர பயணத்தில் வனத்தின் இரு மருகிலும் கூட்டம் கூட்டமாக துள்ளி திரியும் மான்களும் ,தன் சுதந்திரத்தை காட்டும் விதமாக தோகைகளை விரித்து நடனமாடிகொண்டிருந்த மயில்களும் , மருட்சியான பார்வைகளால் எங்களை பார்த்ததும் ஒளிந்து கொண்ட முயல்களையும் ரசித்துகொண்டே மெதுவாக நகர்ந்தோம்.





சற்று தொலைவு நகர்ந்திருப்போம் சட்டென இடது பக்கத்தில் 10 அடி இடைவெளியில் 3 பெரிய யானைகள் நின்றுகொண்டிருந்தன அதில் ஒரு யானை கோபமாக எங்களை நோக்கி வர ஆரம்பித்தது சற்றும் எதிர்பார்க்காத எல்லோரும் பயத்தில் கத்திவிட்டார்கள்.என் கால்கள் அசுரகதியில் ஆக்சிலேடரை அழுத்தின.எங்கள் வாகனம் ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி பறந்தது. எல்லோர் வயிற்றிலும் ஒருவித பயம் கவ்விகொண்டது .ஒரு 5 நிமிட நிசப்தமான பயணம் மீண்டும் பரபரப்பில் தொடங்கியது
மறுபடியும் யானை கூட்டம் இந்த சமயம் குறைந்தது 10 காட்டு யானைகள் வழியின் இரு புறமும் மேய்ந்து கொண்டிருந்தது .




அதில் ஒரு யானை எங்கள் முன்னே ஒரு இரு சக்கர வாகனத்தை பிளிறலுடன் துரத்தி கொண்டிருந்தது .அப்படியே வாகனத்தை மிக மிக மெதுவாக்கிகொண்டோம் .ஏனென்றால் எங்கள் பின்னே ஒரு இடது புறத்தில் ஒரு யானை கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது.இரு சக்கர வாகனத்தை துரத்திய யானை சற்று பாதை கடந்தது மிகுந்த எச்சரிகையுடன் அந்த யானையை கடந்தேன் .எங்கள் சிகப்பு ஓம்னி என்னை மெதுவாக பின்தொடர்ந்தது .சிகப்பு ஓம்னி பார்த்தவுடன் மீண்டும் வாகனத்தை பின்னால் துரத்த ஆரம்பித்தது .( யானைக்கு சிகப்பு என்றால் பிடிக்காதாம் ) சற்று வேகமாக சாலை கடந்து விட்டோம் .


1 கி.மீ சென்றிருப்போம் ஒரு பலத்த பிளிறல் சப்தம் கேட்டேன் மெதுவாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவியிடம் நீ பிளிறல் சப்தம் கேட்டாயா? என்று கேட்டு கொண்டே ஒரு வளைவில் திரும்பினேன் .என் எதிரே ஒரு கார் நின்று கொண்டிருந்தது சுமார் 4 பேர் எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் பின்னே நான் கண்ட காட்சி அலறிவிட்டேன் .ஒரு பெரிய தந்தங்களை கொண்ட யானை பலத்த பிளிறலும் ,துதிக்கையை முன்னே நீட்டிக்கொண்டும் ,காதுகள் முறம் போல் விரித்து கொண்டும் ,அதன் வால் 90 டிகிரியில் பின்னே விரைத்துகொண்டும் அவர்களை துரத்திக்கொண்டு எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருகிறது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை .வேகமாக பின்னால் போகலாம் என்றால் என் பின்னே ஒரு பெரிய வேன் நின்று கொண்டுள்ளது .யானைக்கும் என் வாகனத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்து விட்டது .என் பலத்த கத்தலுக்கு பின் அவரும் பின்னால் வேகமாக செல்ல நானும் வேகமாக பின்னே நகர்ந்தேன் ஒரு கண நேரத்தில் யானை காட்டுக்குள் ஓடி விட்டது அப்போது தான் எங்கள் உயிரே வந்தது .


ஒரு பெரிய ஜுராசிக் பார்க்குக்குள் மாட்டிகொண்டதாக உணர்ந்தேன் .
என் ரத்தம் தாறுமாறாக ஓடியது ,உடலில் உள்ள அனைத்து செல்களும் போர் கால விழிப்பில் இருந்தது அப்போது உணர்ந்தேன் நான் செய்த மிக பெரிய தவற்றை இது போன்ற பாதுகாப்பற்ற இடத்திற்கு குழந்தை ,தாய் ,பெண்களை சுற்றுலா அழைத்துவந்தது .அச்சமயம் மணி மாலை 6:15 எங்களை இருள் கவ்வ துவங்கிவிட்டது.



தொடரும்

Apr 3, 2011

மசினகுடி -ஒரு திகில் பயணம்



கடந்த வெள்ளி அன்று விடியலின் கொஞ்சும் உதயத்துடன் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து ஊட்டி மழை அன்னையின் மடியில் தவழ இரு வாகனத்தில் பயணித்தோம் .செல்லும் வழியில் மேட்டுபாளையம் சாலை புகை மண்டலத்தை பல இருமல்களை தாண்டி மழை அரசியின் பாதமான கல்லார் அடைந்தோம் .

(என் புதல்வன் அவர் மாமாவுடன் உற்சாகமாக )

சற்று நேர ஓய்வுக்கு பின் மீண்டும் எங்கள் வாகனம் எங்களை சுமந்து வேகமான மூச்சு இரைச்சலுடன் மேல் நோக்கி பயணித்தது .செல்லும் வழியில் பள்ளத்தாக்குகளை ரசித்துகொண்டே மதியம் ஊட்டி சென்றடைந்தோம் எங்கள் வருகையை வரவேற்கும் விதமாக மேகங்கள் கறுத்து மழையை எங்கள் மேல் பொழிய இடிகளால் மிரட்டிகொண்டிருந்தது.குளிருந்த காற்றும்,பனிபோலிவும் எங்கள் மேல் படர்ந்து நனைத்துகொண்டிருந்தது.


சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து 1 கி .மீ தூரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தோம் .அங்கு முகம மலர்ந்த சிரிப்புடன் வனத்துறை அதிகாரி உயர்திரு .ஹாலன் அன்புடன் வரவேற்றார் .ஐயா அவர்கள் மிக்க கனிவான ,அன்பாக எங்களை உபசரித்தார் .நாங்கள் தங்க இருக்கும் மசினகுடி அபயாரண்யம் விடுதியின் ரசிதுகளை பெற்றுக்கொண்டு விடைபெற தயாரானோம் .

முக்கிய குறிப்பாக நாங்கள் மசினகுடி செல்ல இருக்கும் தலைகுந்தா ,கல்லட்டி ,பாதை மிக பயங்கரமான பள்ளத்தாக்கு என்றும் சரிவான பாதை என்றும் வாகனத்தை முதல் அல்லது இரண்டாம் கியரில் செல்ல எச்சரிக்கப்பட்டோம் .

எங்கள் வாகனங்கள் சந்தோசத்துடன் மழை சரிவை நோக்கி அதிக பட்ச எச்சரிகையுடன் மெதுவாக சரிந்துகொண்டு சென்றது .100 மீ இடைவெளியில் பல எச்சரிக்கை பலகைகள் (கவனமாக செல்லவும் ,மிக சரிவான ,ஆபத்தான பள்ளத்தாக்கு ,விபத்து பகுதி ,) என்று நம்மை எச்சரித்தன .36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி மசினகுடி கிராமத்தை அடைந்தோம் .

மிகுந்த திகில் மற்றும் ஆபத்து எங்கள் எதிரே மசினகுடி காட்டில் ஒளிந்து காத்திருப்பது அறியாமல் நாங்கள் சந்தோசத்துடன் சிரித்துகொண்டிருந்தோம்
அப்பா நான் ரெடி

நானும் ரெடி ஜூட்

தொடரும் .....,

Mar 11, 2011

என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் -உங்களுடன் பகிர இதோ !!!





நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களுடன் பயணிக்க ....,,,,,,,

என் பிறந்தநாள் மார்ச் 5 ம் தேதியன்று மிக்க மகிழ்வுடன் கொண்டாடினேன் .என் பிறந்த நாள் அன்று என் அண்ணன் மற்றும் பதிவுலக நண்பர் உயர்திரு :வேலன் அவர்கள் வாழ்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .http://vazthalamvanga.blogspot.com/2011/03/blog-post.html.என் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சில புகைப்படங்கள் உங்களுக்காக .....,,,,,,,,,,,,,

அன்பு முதியோர் இல்லம் -கோவை



















இந்த பாட்டி 80 வயதை கடந்தும் இவர் எல்லோரையும் பராமரிக்கும் ஒரு தூணாக உள்ளார் இவர் இன்னும் 100 வயது நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ஏனென்றால்
இவர் வாழ்ந்தால் பலர் வாழ்வர்.உங்கள் சேவை வாழ்க பாட்டி




இந்த பதிவு என் விளம்பரதிற்காகவோ ,தம்பட்டதிற்காகவோ அல்ல .பதிவை படிக்கும் நண்பர்கள் இப்படியும் நாம் வாழும் சக உலகில் மனித சமுதாயம் சந்திக்கும் அவல நிலை எடுத்துரைக்கவே .நம்மால் இயன்ற வரை நாம் சந்தோசப்படும் நாள் அவர்களுக்காக உதவலாமே .எல்லோரும் ஒரு நாள் உதவினால் அவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரு வேளை உணவு கிடைக்குமே .


என் பயணத்தில் உதவும் என் திருமதி.ஜமுனா , அருண் , ராம் , மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்