Nov 9, 2010

கோவை குழந்தைகள் கொடூர கொலைகாரன் போலீசால் சுட்டு கொலை


அதர்மம் தலை தூக்கும் கடைசியில் தர்மம் வெல்லும் .

கடந்த 10 நாட்கள் முன்பு கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கால்வாயில் வீசி கொன்ற கொலைகாரன் மோகன் ராஜ் மற்றும் மனோகர் பிடிபட்டனர் .இவர்களில் கொலைகாரன் மோகன்ராஜ் இன்று அதிகாலை என்கௌண்டேரில் சுட்டு கொல்லப்பட்டான் .

இவர்களை போன்ற குற்றவாளிகளுக்கு இதுவே சரியான தண்டனை .இந்த நாய்களுக்கு கோர்ட் ,கேஸ் ,இவர்களுக்கு 50 போலீஸ் பாதுகாப்பு ,பெட்ரோல் டீசல் செலவு, மணி அடித்தா சாப்பாடு,தங்க இடம்,இதை விட வேறு வசதி என்ன வேண்டும் .

தவறு
செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .இவர்களை போன்ற நரகாசுரர்கள் தினம் தினம் அழிக்க பட வேண்டும் .இப்போதாவது அந்த குழந்தைகளின் ஆன்மா சிறிது சாந்தி அடையும் .இது போன்ற தண்டனை தவறு செய்ய நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .


தமிழக
காவல் துறை வாழ்க !

என்றும் தமிழக காவல் துறை சிறந்தது என்று நிரூபணம் ஆகிவிட்டது . எங்கள் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ஐயா Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றியும் ,நீண்ட ஆயுளுடன் மற்றும் எல்லா இன்பங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணை புரிவார் .மறைந்த குழந்தைகள் ஆன்மா கண்டிப்பாக உங்களை வாழ்த்தும் சந்தேகமில்லை .

ஜெய் ஹிந்த் . WE REALLY PROUD OF YOU SIR

Nov 2, 2010

கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொடூர கொலை

கோவையில் பயங்கரமான கோரமான மோசமான சம்பவம் அரங்கேறி உள்ளது .கோவை டவுனில் துணிக்கடை நடத்தி வருபவரின் மகள் முஸ்கின் (5 ம் வகுப்பு ,வயது 11 ) மற்றும் மகன் ரித்திக் (3 ம் வகுப்பு ,வயது 8 ) இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள் .இவர்கள் பள்ளிக்கு தனியார் ஆம்னி வாகனத்தில் பள்ளிக்கு செல்கிறார்கள் சம்பவதன்று ஆக்டிங் டிரைவராக செயல்பட்ட மோகன்ராஜ் என்பவன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பொள்ளாச்சி சென்று உள்ளான்.அங்கு தன் நண்பனான மற்றொரு கால் டாக்ஸி டிரைவர் மனோகர் என்பவனையும் அழைத்துகொண்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சென்றுள்ளனர் .
சிறுமியை தனியாக பார்த்த மோகன்ராஜ் காமம் தலைக்கு ஏறி சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கி உள்ளான் .இதை பார்த்த சிறுவன் ,சிறுமி கத்த சிறுவனின் கை ,கால் கட்டி பின் சீட்டின் கீழ் அமுத்திவிட்டு சிறுமியை துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளான் .உடந்தையாக டிரைவர் மனோகர் செயல்பட்டுள்ளான் .
ஒரு சமயத்தில் தாங்கள் சிக்கிவிடுவோமோ என்று யோசித்து இருவரையும் கொல்ல முடிவெடுத்து திருமூர்த்தி மலைக்கு மலை மீதிருந்து தள்ளிவிடும் எண்ணத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் பிஞ்சு கால்கள் வலித்து அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு கீழே அழைத்து வந்துள்ளனர் கொலைபாதகர்கள்.
பின்னர் அடுத்து உள்ள பி.கே .பி கால்வாய்க்கு அழைத்து வந்து அடுத்த திட்டமான பாலில் சாணி பவுடர் கலக்கி வாயில் ஊற்றி உள்ளனர் கசப்பாக இருந்ததால் துப்பி அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு முகத்தில் பிளாஸ்டிக் பை கட்டி கொலை முயற்சித்துள்ளனர் குழந்தைகள் மூச்சு திணறி கத்தியதால் பயந்து அத்திட்டத்தையும் கைவிட்டு உள்ளனர் .பிறகு டிரைவர்கள் இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டு இருகுழந்தைகளையும் மிரட்டி சாப்பிட வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளனர்
அருகில் ஓடிய கால்வாயில் கை கழுவ கூறியுள்ளனர் பயந்த சிறுமி மறுத்து உள்ளால் "நாங்கள் ஒன்றும் தண்ணீரில் தள்ளிவிட மாட்டோம் உன் தம்பி கழுவிவிட்டு வரட்டும் என்று சிறுவனை அனுப்பிஉள்ளனர்.சிறுவன் திரும்பிவந்ததால் சிறுமி தன் தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு கால்வாயில் கை கழுவ சென்றுள்ளனர் கொலைபாதகர்கள் இருவரையும் இதுதான் சமயமென்று தண்ணீரில் தள்ளி விட்டனர் .தண்ணீரில் தத்தளித்தபடியே உயிர் நீத்து காலத்தின் பிடியில் சிக்கி தண்ணீரின் போக்கிற்கு அடித்து செல்லப்பட்டனர் .கொலையாளிகளுக்கு மனதில் சிறு ஈரம் கூட இருந்திருக்காதா ?
உயர்திரு காவல் துறை ஆணையர் திரு Dr.c.சைலேந்திரபாபு அவர்களின் தீவிர முயற்சியால் இருவரின் சடலங்களையும் மீட்டு கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இச்சம்பவம் சினிமாவை மிஞ்சும் சம்பவமாக நடந்துள்ளது இவ்வளவு ஒரு கேவலமான சம்பவங்களுக்கு விடை சொல்வது யார் ?

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் !
இது போன்ற சம்பவங்கள் "அஞ்சாதே'" மற்றும் சில திரைப்படத்திலும் "ஆசை" படத்தில் பிளாஸ்டிக் கவர் கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் திரை காட்சிகளாக வந்துள்ளன.இதை போன்ற வன்முறை தூண்டும் சினிமாக்களை பார்பவர்கள் சில சந்தர்பங்களில் இப்படிப்பட்ட யோசனைகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக உள்ளன.
திரைப்படங்கள் சமுதாயத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் திரைப்படங்கள் தயாரிக்க படவேண்டும் .தயாரிப்பாளர்களின் சுய லாபத்திற்காக இது போன்ற காமம் மற்றும் கொலை செய்ய வழி சொல்லி கொடுக்கும் திரைப்படங்கள் தவிர்க்க படவேண்டும் .

சட்டங்கள் கடுமையாக்கல்
சமீப காலத்தில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது .இது போன்ற குற்றங்களுக்கு காரணம் நம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் " எப்படியும் சிக்கினால் எதாவது ஒரு வழியில் வெளியே வந்துவிடலாம் " எனும் எண்ணம் மற்றும் மீறிபோனால் ஆயுள் தண்டனை என்ற தைரியம் .ஒரு குற்றத்திற்கு வழக்கு என்ற பெயரில் காலங்கள் வருட கணக்கில் நீண்டு செல்தல் .
சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான பொதுமக்கள் மத்தியில் "கல்லால் அடித்து கொள்தல் ,சிரசேதம் ,கை கால் வெட்டுதல் " போன்ற கடுமையான பயத்தை உண்டு பண்ணும் தண்டனைகளும் மரண தண்டனைகள் கொண்டுவரப்படவேண்டும் .
மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
குறிப்பாக பணத்திற்காகவோ, பகை தீர்க்கவோ,அப்பாவி பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே என்ற அவசர சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .

வழக்கறிஞர் நண்பர்களுக்கு வேண்டுகோள்
டிரைவர்கள் மோகன்ராஜ் மற்றும் மனோகர் போன்ற மனதில் ஈரமற்ற பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் கொலைபாதக செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழக்கில் ஆஜராக கூடாது .நாளை நம் பிள்ளைகளும் பழி தீர்க்கவோ,பணம் பறிக்கவோ , இதே நிலைமைக்கு ஆளாக நேரலாம் .
காவல் துறைக்கு வேண்டுகோள்
  • எல்லா தனியார் வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் முடிந்தால் வி.ஐ.பி .வாகனம் தவிர மற்ற எல்லா வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
  • ஒவ்வொரு தனியார் வாகனங்களிலும் GPRS மூலம் வண்டி எங்கு சென்றுகொண்டிருகிறது என்பதை கண்காணிக்கும் கருவிகளை அவசியம் பொறுத்த வேண்டும் .
  • பள்ளி நுழை வாசல்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்படவேண்டும் அதன் மூலம் யார் அழைத்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும் .
  • ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்ளும் உள்ள தனியார் ஓட்டுனர் புகைப்படத்துடன் கூடிய விவர குறிப்பேடு பெற்றிருக்க வேண்டும் .அதில் பழைய குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் .
  • பள்ளி வாகனங்களில் அதிவேக தடை கருவிகள் பொறுத்த செய்யவேண்டும்
  • சோதனை சாவடிகள் அதிக படுத்தப்பட வேண்டும் குறிப்பாக புற காவல் சோதனைசாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பணியமர்த்த படவேண்டும் .இரவு நேரம் மட்டுமன்றி பகல் நேரங்களிலும் திடிர் வாகன சோதனைகள் செய்ய வேண்டும் .பகல் வாகன சோதனைகள் நடப்பதே இல்லை
  • போக்குவரத்து ரோந்து வாகனங்கள் ,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக படுத்த படவேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் குழந்தை கடத்தல் பற்றி குழந்தைகளுக்கு பயபடாமல் சமயோசிதமாக செயல்பட ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் கட்டாய அவசிய தற்காப்பு கலை போதிக்க அறிவுறுத்த படவேண்டும்
கண்ணீர் அஞ்சலி
உயிர் நீத்த குழந்தைகளுக்கு பதிவர்கள் மற்றும் இப்பதிவை படிக்கும் எல்லா வாசகர்கள் சார்பாகவும் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டலாம் .
குழந்தைகளை பிரிந்து துயரால் வாடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மன தைரியம் உண்டாகட்டும் .

தகவல் மற்று படங்கள் உதவி தின மலர் நாளிதழ் : நன்றி








கொலையாளி மனோகர்